World Day of Persons with Disabilities
Today 03/12/2022 Saturday at 3.30 pm the World Day of Persons with Disabilities was organized on a small scale by our Pular Charitable Organization in Vali. West Divisional Sabha Hall.
In this event Mr. A. Irangadampanathan, a visually chalenge person from Moolai, gave a special speech along with a short message from our administrators. He expects a financial assistance of approximately three lakh rupees from donors to publish the book written by him (1000 copies). (We will help those who want to help contact him)
After that, Dr. T. Sathyamurthy, Director of Jaffna Teaching Hospital gave an address and distributed bedsheets (bedsheets) bought by the donations of the donors who support our organization to the visiting devotees.
Snacks and tea were also served to all who attended.
Honorable Vice President Mr. T. Nathanendran and Secretary Mr. S. Balaruban, who donated free of charge the Pradeshiya Sabha hall, sound receivers and sound amplifier systems, beams and lanterns for conducting the events, the Pradeshiya Sabha officers who arranged the hall, especially Seelan Anna and Sami Aiya of our organization. We express our gratitude.
To the Director of Jaffna Teaching Hospital, who participated in the midst of the workload, to the special needs people, their parents, Pradeshiya Sabha officials, to Mr. E. Paraneetharan, the secretary teacher of our organization, who coordinated the events, and to Mr. C. Indrakumar, the executive member and prison superintendent of our organization, who gave a special speech. Executive member and Gramsevak Mr.N.Sivaruban, Deputy Secretary President Mr.E.Siritharan who delivered the vote of thanks, Executive member Public Health Inspector Mr.T.Mohanaruban who helped to conduct the event effectively, Volunteers Mr.C.Rajaram, Teacher Mr. Our heartfelt thanks to Ve.Nishanth and to all the kind foreign and domestic donors who sustain our organization, if anyone has been missed.
இன்று 03/12/2022 சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினம் சிறிய அளவில் எமது புலர் தொண்டு அமைப்பினால் வலி.மேற்கு பிரதேச சபை மண்டபத்தில் நடாத்தப்பட்டது.
இந்நிகழ்வில் எமது நிர்வாகிகளின் சிற்றுரையுடன் மூளாயைச் சேர்ந்த விழிப்புலன் குறைபாடுடைய மாற்றுத்திறனாளியான திரு.அ.இரங்கடம்பநாதன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். அவரால் எழுதப்பட்ட புத்தகத்தை(1000 பிரதிகளை) வெளியிடுவதற்கு கொடையாளிகளிடம் இருந்து அண்ணளவாக மூன்று இலட்ச ரூபா நிதி உதவியை எதிர்பார்க்கின்றார். (உதவ விரும்புவோர் அவருடன் தொடர்பு கொள்ள உதவுவோம்)
அதனைத் தொடர்ந்து யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் திரு.த.சத்தியமூர்த்தி அவர்கள் உரையாற்றியதுடன் வருகை தந்திருந்த விசேடதேவை உடையோருக்கு எமது அமைப்பை தாங்கி நிற்கின்ற நன்கொடையாளர்களின் நன்கொடையால் கொள்வனவு செய்யப்பட்ட போர்வைகளை(பெட்சீட்) வழங்கிவைத்தார்.
அத்துடன் வருகை தந்த அனைவருக்கும் சிற்றுண்டிகளும் தேநீரும் வழங்கப்பட்டது.
நிகழ்வுகளை நடாத்த பிரதேசசபை மண்டபம், ஒலி வாங்கி ஒலி பெருக்கி அமைப்புகள், கதிரைகள், குத்துவிளக்கு என்பவற்றை இலவசமாக தந்துதவிய பிரதேச சபை கௌரவ தவிசாளர் திரு.த.நடனேந்திரன் மற்றும் செயலாளர் திரு.ச.பாலறூபன், மண்டப ஒழுங்கமைப்புகளை செய்து தந்த பிரதேச சபை உத்தியோகத்தர்கள் குறிப்பாக சீலன் அண்ணா மற்றும் சாமி ஐயா ஆகியோருக்கு எமது அமைப்பின் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
வேலைப்பளுவின் மத்தியிலும் கலந்து சிறப்பித்த யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கும், விசேட தேவையுடையவர்கள், அவர்களின் பெற்றோர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சிறப்பாக நிகழ்வுகளை ஒருங்கிணைத்த எமது அமைப்பின் செயலாளர் ஆசிரியர் திரு.இ.பரணீதரன் அவர்களுக்கும், சிறப்புரையாற்றிய எமது அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் சிறைச்சாலை அத்தியட்சகருமான திரு.சீ.இந்திரகுமார் அவர்களுக்கும், சிறப்புரையாற்றிய எமது அமைப்பின் நிர்வாக உறுப்பினரும் கிராமசேவகருமான திரு.ந.சிவறூபன் அவர்களுக்கும், நன்றியுரை நிகழ்த்திய உப செயலாளர் அதிபர் திரு.இ.சிறிதரன் அவர்களுக்கும், நிகழ்வை திறம்பட நடத்த உதவிய நிர்வாக உறுப்பினர் பொதுச் சுகாதார பரிசோதகர் திரு.த.மோகனறூபன் அவர்களுக்கும், தன்னார்வ தொண்டர்கள் திரு.சி.ராஜாராம் அவர்களுக்கும், ஆசிரியர் திரு.வே.நிசாந்த் அவர்களுக்கும் மற்றும் எமது அமைப்பினை தாங்கி நிற்கின்ற கருணை உள்ளம் கொண்ட வெளிநாட்டு உள்நாட்டு நன்கொடையாளர்களுக்கும், யாராவது தவறவிடப்பட்டிருப்பின் அவர்கள் எல்லோருக்கும் எமது உளப்பூர்வமான நன்றிகள்.