Pulartrust activities
20/06/2022 At 4 pm yesterday, at the Sulipuram East Senior Citizens ‘Hall, the Jaffna District Rotary Club distributed book bags and books to 13 economically disadvantaged students at the Sulipuram East Senior Citizens’ Hall. We truly thank Mrs. Kanzana Paranitharan (Physiotherapist Tellipalai Base Hospital) and the Jaffna District Rotary Club for organizing this event.
Today 23/06/2022 at 5.45 pm directly to Mrs. Subasini Jegatheeswaran (Gajipana’s mother) who is in bed after undergoing spinal surgery
Presented by Mr. Muthulingam Mayurathan (Rames) in the presence of Deputy Secretary Mr. E. Sreedharan and myself.
We also extend our heartfelt thanks to the family of three who helped with the request of our Fular Charity.
20/06/2022 நேற்று மாலை 4 மணியளவில் எமது புலர் தொண்டு அமைப்பின் ஏற்பாட்டில் சுழிபுரம் கிழக்கு முதியோர் சங்க மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட றோட்டறிக் கழகத்தினால் பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள 13 மாணவர்களுக்கு புத்தகப் பைகளும் அப்பியாசக் கொப்பிகளும் வழங்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்வை ஒழுங்கமைத்த திருமதி காஞ்சனா பரணீதரனுக்கும்(Physiotherapist Tellipalai Base Hospital) யாழ் மாவட்ட றோட்டறிக் கழகத்தினருக்கும் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இன்று 23/06/2022 மாலை 5.45 மணியளவில் முள்ளந்தண்டு சத்திரசிகிச்சை செய்து படுக்கையாக உள்ள திருமதி சுபாசினி ஜெகதீஸ்வரனிடம் (கஜீபனாவின் அம்மா) நேரடியாக
திரு முத்துலிங்கம் மயூரதன்(ரமேஸ்) அவர்களால் உபசெயலாளர் திரு இ சிறீதரன் மற்றும் எனது முன்னிலையில் வழங்கப்பட்டது.
எமது புலர் தொண்டு அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று உதவிய மூவரது குடும்பத்திற்கும் எமது உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.